தமிழ
கெட் குழு
நிறுவனங்கள் என்பது உன்னதமான மொழிபெயர்ப்புகள்
என்பதற்கான பெயராகவே ஆகிவிட்டது.
முப்பதாண்டு
கால அனுபவத்தின் அடிப்படையில் நாங்கள்
(சோகெட்) இன்று பலமொழி ஆவணத் தயாரிப்பில்
சிறப்புத் தகுதி கொண்ட அனைத்திலும் பெரிய
இத்தாலிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறோம்.
பெரிய மொழிகள்
அனைத்திலும் படைப்பு (அதாவது தொழில்நுட்ப
எழுத்தாக்கம், அதை நெறிப்படுத்தும்
ஆசிரியப்பணி) அந்தந்த நாட்டுக்கேற்ப அதனை
சீரமைப்பது, வரைகலை சி.ஏ.டி, (CAD),
பக்கங்களின் அமைப்பு, அச்சிடுதல் ஆகிய
துறைகளில் நாங்கள் இயங்கி வருகிறோம்.
பன்முக ஊடகத்
தயாரிப்புகள், இன்டர்நெட்டுக்கான காட்சி
அமைப்புகள், கணிப்பொறி பக்கங்கள் ஆகியன முலம்
உங்கள் பன்னாட்டுத் தொடர்புகளை அதிகபட்சமாக
ஆக்குவதற்கு சகலவிதமான துறைகளிலும்
செயலாற்றுகிறோம்.
அனைத்துலக தர
நிர்ணயம் (ஐஎஸ்ஓ) 9001 இன் தரக்கட்டுப்பாடு
விதிகளுக்கு இசைந்த தர நிர்ணய அமைப்பில் இந்த
நிறுவனம் இயங்கி வருகிறது.
-
தாய்மொழியாகக் கொண்டோர் மூலம் மொழி பெயர்ப்பது
-
தயாரிப்பின்
அனைத்து கட்டங்களையும் இயந்திரமயமாக்கியமை
-
ஊழியர்களை
கவனமாகத் தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவருக்கும்
தொடர்ந்து பயிற்சி தருதல்
-
எங்கள்
தொழில் நுட்ப வளங்களை இடைவிடாது
நவீனப்படுத்துதல் மரபாக்கப்படத்தக்க
கலைச்சொற்களை உருவாக்குதல் அப்படி மரபாக
ஆகிவிட்டவற்றைப் பயன்படுத்துதல்
-
கணினியின்
உதவியுடனான மொழிபெயர்ப்புத் தொழில் நுட்பங்களை
(மொழியாக்கம் தொடர்பான நினைவுப்பதிவு) தர
உயர்வைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்தை
நிறைவேற்றும் வண்ணம் பயன்படுத்துதல்
-
கணினி
ஏற்பாடுகளுடன் இசைவான தன்மை
-
உறுதியான
தரக்கட்டுப்பாடு.
-
ஆகியவை இதில்
எங்களுக்கு உதவுகின்றன.
ஒவ்வொரு
பணியையும் நிர்வகிக்கவும், வளங்களை கையாளவும்,
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைக்
கண்காணிக்கவும் தகுதிவாய்ந்தத் திட்ட
மேலாளர்கள் உள்ளனர்.
அதேபோல்
மசிந்தோஷ் வின்டோஸ் ஆகியவற்றுக்கேற்ப எமது
மென்பொருள் ஏற்பாடுகளை தொடர்ந்து
நவீனப்படுத்துவதும் எங்கள் வாடிக்கையாளர்கள்
தமக்குள்ள வசதிகளைக் கொண்டே முழுதாக தேவைகளை
சமாளிக்க எங்களை நம்பலாம் என்று
உறுதியளிக்கிறது.
மேற்கண்ட
காரணங்களால்தான், எங்களுக்கு 5000
வாடிக்கையாளர்கள் இருப்பதோ,
வணிகப்பெருங்குழுமங்களின்
வெளியீடுகளிலிருந்து, குறிப்பிடத்தக்க
பன்னாட்டுத் திட்டங்கள் பற்றிய மடல்கள்
வரையில் எமது எல்லாவிதத் தயாரிப்புகளும்,
அவர்களது நம்பிக்கையே எங்களது நுட்பத்
திறமைகளை வளர்த்துக் கொண்டிருப்பதோ
வியப்புக்குரியன அல்ல. ஏதேனும் ஒரு துறையில்
எங்கள் பணிக்கான ஊதிய விகிதங்களை
விசாரித்தீர்கள் என்றால் ஐரோப்பியச் சந்தையிலே
மலிவான முறையில் (உயர்ந்த) பணிகளை நாங்கள்
செய்வதை உணர்வீர்கள்.

This page in PDF

This page in Flash